பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

0
11

பூந்​தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் ஏ.எம்​. சவுத்ரி மற்​றும் அவரது குழு​வினர் முதல்​கட்ட ஆய்வை நேற்று தொடங்​கினர். கட்​டு​மானப் பணி​கள், மின்​சா​ரம், தண்​ட​வாளம் உள்​ளிட்​டவை ஆய்வு செய்​யப்​பட்​டன.

சென்​னை​யில் 2-ம் கட்​ட​மாக, 3 வழித்​தடங்​களில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், கலங்​கரை​விளக்​கம் – பூந்​தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவி​லான வழித்​தடத்​தின் ஒருபகு​தி​யாக, பூந்​தமல்லி – வடபழனி வரையி​லான 14.64 கி.மீ. தொலைவு உயர்​மட்ட தடத்​தில் அனைத்து பணி​களும் முடிந்​து​விட்​டன.

இதைத் தொடர்ந்​து, மெட்ரோ ரயில் நிர்​வாகம் தரப்​பில் பல்​வேறு சோதனை​கள், பாது​காப்பு ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பின்​னர் பெங்​களூரு​வில் உள்ள மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யருக்கு ஆய்வு மேற்​கொள்ள அழைப்பு விடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இத்​தடத்​தில் மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யர் அனந்த் மதுகர் சவுத்ரி மற்​றும் அவருடைய குழு​வினர் முதல் கட்ட ஆய்வை நேற்று தொடங்​கினர்.

முதல்​நாள் ஆய்​வின் தொடக்​க​மாக, 4-வது வழித்​தடத்​தில் பூந்​தமல்லி புறவழிச்​சாலை நிலை​யம் முதல் ஐயப்​பன்​தாங்​கல் மெட்ரோ நிலை​யம் வரையி​லான 6.134 கி.மீ. தொலை​வுக்கு ஆய்வு மேற்​கொண்​டனர்.

மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யருடன் 3 பாது​காப்பு துணை ஆணை​யர்​கள், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் இயக்​குநர்​கள் தி.அர்ச்

​சுனன் (திட்​டங்​கள்), மனோஜ் கோயல் (அமைப்​பு​கள் மற்​றும் இயக்​கம்) மற்​றும் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் உயர் அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

முதல்​கட்ட ஆய்​வின் போது, கட்​டு​மானப் பணி​கள், மின்​சா​ரம், தண்​ட​வாளக்​கூறுகள் மற்​றும் முக்​கிய மேம்​பாலக் கட்​டமைப்​பு​கள் ஆகியவை விரி​வாக ஆய்வு செய்​யப்​பட்​டன. 11 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​படு​கின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here