ருதுராஜ் கெய்க்வாட்​டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

0
16

டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் ஆட்​டத்​தில் பந்​து​வீச கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்டதற்​காக சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நேற்று முன்​தினம் சிஎஸ்​கே- டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்தப் போட்​டி​யின்​போது, சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி வீரர்​கள் குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் ஓவர்​களை வீசி முடிக்​க​வில்​லை.

இதனால் அணி கேப்​ட​னான ருது​ராஜ் கெய்க்​வாட்​டுக்கு ரூ.12 லட்​சம் ரூபாய் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தொடரின் முதன்​முறை​யாக சிஎஸ்கே அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்​துக் கொண்​டுள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது. சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்​டி​யில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வரும் 14-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் எதிர்​கொள்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here