டேக்வாண்டோ தரவரிசையில் ரூபாவுக்கு 8-வது இடம்

0
11

டேக்வாண்டோ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனையான ரூபா பேயர் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் உலக தரவரிசையில் 8-வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் முதல் டேக்வாண்டோ வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் டேக்வாண்டோ உலக தரவரிசை பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியர் இவர்தான்.

ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள 24 வயதான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ரூபா பேயர், கடந்த நவம்பர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் ஆஸ்திரியாவில் நடைபெற்ற உலக டேக்வாண்டோ பிரெஸிடண்ட் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

டேக்வாண்டோவில் பூம்சே எனும் பிரிவில் ரூபா பேயர் போட்டியிட்டு வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டேக்வாண்டோ தொடரிலும் ரூபா பேயர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here