மராட்டிய மாமன்னர் சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ‘சாவா’ என்ற திரைப்படம் வெளியானது.
மராத்தியர்களிடம் இருந்து தங்கத்தை கொள்ளையடிக்கும் முகலாயர்கள் மத்திய பிரதேசத்தின் புர்கான்பூர் ஆசிர்கர் கோட்டை பகுதியில் அவற்றை புதைத்து வைத்திருப்பதாக திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக ஆசிர்கர் பகுதி மண்ணில் தங்க புதையல்கள் இருப்பதாக மக்களிடையே காட்டுத் தீ போன்று வதந்தி பரவி வருகிறது.
கடந்த சில வாரங்களாக நள்ளிரவு நேரத்தில் ஆசிர்கர் பகுதிக்கு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் குவிந்து மண்ணை அரித்து தங்கம் கிடைக்கிறதா என்று தேடுகின்றனர். இதுபோல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.














