ருத்ரா அடுத்து நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமான படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனை விஷ்ணு விஷால் தயாரித்து வெளியிட்டார். தற்போது ருத்ராவின் அடுத்த படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார். இதன் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது.
ருத்ராவின் அடுத்த படத்தினை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கவுள்ளார். இதில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகி வருகிறது.
தான் நடித்து வரும் படங்கள் அனைத்தையும், தானே தயாரித்தும் வருகிறார் விஷ்ணு விஷால். அந்த வரிசையில் தற்போது தம்பியின் படங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
            













