நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் விபி-ஜி- ராம் ஜி திட்டத்தின் பெயரை குறிப்பிடவில்லை. இத்திட்டத்துக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) பெயர் விபி- ஜி ராம் ஜி என்று சமீபத்தில் மாற்றப்பட்டது. மேலும், ஏற்கெனவே இருந்த திட்டத்துக்கு மத்திய அரசு 100% நிதி அளித்தது. மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி அதற்கான நிதியை மத்திய அரசு 60 % மாநில அரசு 40% கொடுக்க வேண்டும். கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் இத்திட்டத்தின் வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது உரையில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை. எனினும், இந்தத் திட்டத்துக்கு 95 ஆயிரத்து 692 கோடியே 32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள கொடுக்கப்பட வேண்டிய நிதிக்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



