ரூ.8.09 லட்சம் கோடியில் பட்ஜெட்: உ.பி சட்டப்பேரவையில் தாக்கல்

0
97

உ.பி. சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.8 லட்சத்து 8,736 கோடிக்கான இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: பட்ஜெட்டில் சுமார் 22% வளர்ச்சி நோக்கங்களுக்காகவும் 13% கல்விக்காகவும் 11% விவசாயம் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்காகவும் 6% சுகாதாரத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தியுள்ளோம். செயற்கை நுண்ணறிவு நகரம் ஒன்றை மாநில அரசு உருவாக்கும். சைபர் பாதுகாப்பில் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக ஒரு பூங்கா அமைக்கும்.

நிதி ஆயோக்கால் முன்னணி மாநிலமாக உ.பி. அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளது. வளர்ச்சி செலவினங்களை அதிகரிக்கவும் கடனை குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உ.பி.யின் வரி வருவாய் நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது. இது வலுவான நிதி நிர்வாகத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here