கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினருக்கு ரூ.7,379 கோடி பணப் பலன்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

0
15

சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சிவசங்​கர் பேசி​ய​தாவது: போக்​கு​வரத்து துறை​யில் ஓய்​வு​பெற்ற, விருப்ப ஓய்​வு​பெற்ற மற்​றும் பணிக் காலத்​தில் மறைந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு உரிய காலத்​தில் பணப் பயன்​களை வழங்க முடி​யாத சூழல் கரோனா காலத்​துக்கு முன்​பாகவே இருந்​தது.

நிதி நெருக்​கடி​யால் அந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்​தது. இந்​நிலை​யில், இந்த ஆட்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து ஒவ்​வொரு கட்​ட​மாகபணப் பலன்​களை வழங்கி வந்​தார்.

அதன் உச்​சகட்​ட​மாக கடந்த 2024 ஆகஸ்ட் முதல் 2026 மார்ச் வரையி​லான கால​கட்​டத்​தில் மறைந்த, ஓய்வு பெற்ற, ஓய்வு பெற உள்ள 6,867 தொழிலா​ளர்​களுக்கு தற்​போது ரூ.2,446 கோடி வழங்​கி​யுள்​ளார்.

முன்​ன​தாக, கடந்த 2021-22-ம் ஆண்​டில் 1,241 பேருக்கு ரூ.248 கோடி, 2022-23-ம் ஆண்​டில் 5,267 பேருக்கு ரூ.1,339 கோடி, 2023-24-ம் ஆண்​டில் 210 பேருக்கு ரூ.32 கோடி, 2024-25-ம் ஆண்​டில் 4,740 பேருக்கு ரூ.1,278 கோடி பணப் பலன்​களை வழங்கி இருந்​தார்.

கடந்த 5 ஆண்​டு​களில் மொத்​தம் 24,200 தொழிலா​ளர்​களுக்கு ரூ.7,379 கோடி பணப் பலன்​களை முதல்​வர் வழங்கி​யுள்​ளார். ஓர் ஆட்​சிக் காலத்​தில் ஓர் ஊதிய உயர்வு பேச்​சு​வார்த்​தையை முடிப்​பதே சிரம​மாக இருக்​கும் சூழலில், இந்த ஆட்​சி​யில் 2 பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டுள்​ளது.

முதல்​வரின் நடவடிக்​கைகளால், போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் மிகுந்த மகிழ்ச்​சி, நம்​பிக்​கை​யுடன் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவ்​வாறு அமைச்​சர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here