
கணவன்–மனைவி பிரச்சினைக்குத் தீர்வு தேடிச் சென்ற பெண்ணிடம் பூஜை என்ற பெயரில் ரூ.50 லட்சம் பணம், 25 சவரன் நகைகள் பறிக்கப்பட்டதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மத்திக்கோட்டைச் சேர்ந்த மினிஷா, தோழியின் ஆலோசனையின்படி மேக்கோட்டை பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு பூஜைக்காகத் திருமணப் புடவை, தாலிச் செயினைப் பெற்றதுடன், குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து என அச்சுறுத்தி பணம், நகைகளை வாங்கியதாகப் பெண் சாமியார் சாலினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த ஜெஸ்ட்டஸ் இரணியல் கோணம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் ஆகியோர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
குடும்பப் பிரச்சினை தீர்ந்ததோ இல்லையோ, பணமும் நகையும் போனதுதான் மிச்சம்!
திருப்பிக் கேட்டபோது, ‘ரத்தம் கக்கி இறந்துவிடுவாய்’ என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த மினிஷா, மேலும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பக்தி நம்பிக்கையைப் பயன்படுத்தி இப்படியொரு வசூலா? காவல்துறை விசாரணையில்தான் உண்மை வெளிவரும்