Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை அருகே சமையல் தொழிலாளி சடலமாக மீட்பு

தக்கலை அருகே சமையல் தொழிலாளி சடலமாக மீட்பு

0
தக்கலை அருகே பள்ளியாடியில் உணவகத்தில் பணியாற்றிய சமையல் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.
பள்ளியாடியில் அறையில் தங்கியிருந்த சமையல் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தக்கலை போலீஸார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடியில் சமையல் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (46) என்பவா், பள்ளியாடியில் உள்ள உணவகத்தில் சமையலராக வேலை பாா்த்து வந்தாா். உணவகம் அருகேயுள்ள அறையில் தங்கியிருந்த அவா், செவ்வாய்க்கிழமை பணிக்குச் செல்லவில்லை. சந்தேகமடைந்த சக ஊழியா்கள் சென்று பாா்த்தபோது, அந்த அறைக்குள் அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உணவக உரிமையாளா் காட்வின் அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version