பிஹாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

0
14

பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார்.

நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்​பில் அண்​மை​யில் சுமார் ஒரு கோடி பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. இதற்கு போட்​டி​யாக ஆர்​ஜேடி முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் புதிய வாக்​குறு​தியை அளித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக பாட்​னா​வில் நேற்று அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பிஹாரில் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி ஆட்சி அமைத்​தால் இளைஞர்​கள், பெண்​கள், விவ​சா​யிகள் பலன் அடை​யும் வகை​யில் பல்​வேறு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும். வரும் ஜனவரி 14-ம் தேதி மகர சங்​க​ராந்தி (பொங்​கல்) பண்​டிகையை ஒட்டி, தாய்- சகோ​தரி திட்​டத்​தின் கீழ் பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும். அடுத்த 5 ஆண்டுக்கு ஆண்டுதோறும் இத்தொகை வழங்கப்படும். அதோடு பெண்​களுக்கு மாதந்​தோறும் தலா ரூ.2,000 நிதி​யுதவி வழங்​கப்​படும்.

குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என்று எங்​களது தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளிக்​கப்​பட்டு உள்​ளது. இதை நிச்​ச​யம் நிறைவேற்​று​வோம். மேலும் விவ​சா​யிகளுக்​காக இலவச மின்​சார திட்​டம் செயல்​படுத்​தப்​படும். கடந்த 20 ஆண்​டு​களாக தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஆனால் மாநிலம் இன்​ன​மும் பின்​தங்​கிய நிலை​யிலேயே இருக்​கிறது. இளைஞர்​கள் வேலை தேடி வெளி​மாநிலங்​களுக்கு இடம் பெயர்ந்து வரு​கின்​றனர்.

பிரதமர் நரேந்​திர மோடி குஜ​ராத்​துக்கு முன்​னுரிமை அளிக்​கிறார். அந்த மாநிலத்​தில் புதிய ஆலைகளை தொடங்​கு​கிறார். வாக்​குக்​காக மட்​டுமே அவர் பிஹாருக்கு வந்​துள்​ளார். முதல்​வர் நிதிஷ் குமார் பெயரளவுக்கு மட்​டுமே முதல்​வ​ராக நீடிக்​கிறார். டெல்​லி​யில் இருந்தே பிஹாரை ஆட்சி செய்​கின்​றனர். குஜ​ராத்தை சேர்ந்​தவர்​கள் பிஹாரை ஆட்சி செய்ய அனு​ம​திக்க மாட்​டோம்.

நான் 17 மாதங்​கள் துணை முதல்​வ​ராக பதவி வகித்​தேன். அப்​போது 5 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை ஏற்​படுத்தி கொடுத்​தேன். எனக்கு மீண்​டும் வாய்ப்பு அளித்​தால் வேலை​வாய்ப்​பின்மை பிரச்​சினைக்கு முழு​மை​யாக தீர்வு காண்​பேன்​. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here