டெல்லியில் அரசு பொறியாளர் வீட்டில் ரூ.2.39 கோடி பறிமுதல்

0
245

டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி பொறியாளரின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.2.39 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டியில் சுற்றுச்சூழல் முதுநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் முகம்மது ஆரிப். இவர் ரூ.91 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகங்களில் சிபிஐசோதனை நடத்தியது. இதில் ரூ.2.39 கோடி ரொக்கமும் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும் முகம்மது ஆரிப் மட்டுமின்றி லஞ்ச பணத்தை கொண்டு சேர்த்த கிஷ்லாய சரண்சிங்,இடைத்தரகர் பகவத் சரண் சிங் மற்றும் 2 தொழிலதிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here