அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி

0
214

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி மகன் மெர்லின் (29) இவர் விவசாயத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்.இவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: – விவசாயத் துறையில் நான் பட்டம் பெற்றுள்ளேன். அரசு வேலைக்காக காத்திருந்த நிலையில் எனது ஊரை சேர்ந்த ரவி, நாகர்கோவில் இம்மானுவேல், சென்னை அருகம்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரகுமார் ஆகியோரின் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

அதற்காக என்னிடமிருந்து ரூபாய் 17 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் என்னை ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரவி, இம்மானுவேல், ஹரிஹர குமார் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here