தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற சோதனைகளில் ரூ.152 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்

0
18

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி பறக்​கும் படைகள் மற்​றும் நிலை கண்​காணிப்பு படைகள் நடத்​திய சோதனை​களில் இது​வரை ரூ.152 கோடி மதிப்​பிலான ரொக்​கம் மற்​றும் பரிசுப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ளன.

அதன்​படி, உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் ரொக்​க​மாகவோ, ரூ.10 ஆயிரம் மதிப்​புக்கு மேல் பொருட்​களாகவோ கொண்டு செல்ல அனு​மதி இல்​லை.

விதி​மீறல்​களை கண்​காணிக்க தமிழம் முழு​வதும் தலா 2,106 பறக்​கும் படைகள் மற்​றும் நிலை கண்​காணிப்பு குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் மூலம் கணிச​மான அளவு பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

நேற்​றைய நில​வரப்​படி ரொக்​க​மாக ரூ.30.53 கோடி, ரூ.72 லட்​சம் மதிப்பு மது​பானம், ரூ.6.47 கோடி மதிப்பு போதைப்​பொருட்​கள், ரூ.92.02 கோடி மதிப்​பிலான தங்​கம் மற்​றும் வெள்ளி பொருட்​கள், ரூ.22.19 கோடி மதிப்​பிலான இலவச​மாக வழங்க வைத்​திருந்த பொருட்​கள் மற்​றும் பிற பொருட்​கள் என மொத்​தம் ரூ.152 கோடி மதி்ப்​பிலானவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here