கர்நாடக அரசை கவிழ்க்க ரூ.100 கோடி குதிரை பேரம்: பாஜக மீது காங். எம்எல்ஏ குற்றச்சாட்டு

0
153

கர்நாடக மாநிலம் மண்டியா சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா (எ) கனிகா நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங் கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மறுதினமே ஒரு மூத்த பாஜக தலைவர் என்னை சந்தித்து பேசி னார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினா மா செய்து விட்டு, பாஜகவில் இணைந்தால் ரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி வழங் குவதாக கூறினார். இதேபோல 30 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தாக அவர் கூறினார்.

இதனால் கோபமடைந்த நான். அமலாக்கத் துறையில் பு கார் அளிப்பதாக எச்சரித்தேன். அதன் பிறகே அவர் எனது அறை யில் இருந்து வெளியேறினார். இது தொடர்பாக லோக் ஆயுக்தா போலீஸில் புகார் அளிக்க இருக்கிறேன். இந்த புகார் தொடர்பான வீடியோ. ஆடியோ. சிசிடிவி புகைப்படங் களை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு இவ்வாறு ரவிகுமார் ரவிகுமார் கவுடா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here