ரூ.100 கோடி மோசடி வழக்கு: அமலாக்கத் துறை அதிகாரிகள் 23 இடங்களில் சோதனை

0
253

சாமானிய மக்களின் ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கணக்குத் தொடங்கி ரூ.100 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக மாலேகானைச் சேர்ந்த சிராஜ் அகமது ஹாரூன் என்பவர் மீது கடந்த வாரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அவர் தொடர்புடைய 23 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. சிராஜ் அகமது டீ மற்றும் குளிர்பானம் விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர் சாமானிய மக்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களைப் பெற்று போலியாக வங்கிக் கணக்குத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ரூ.100 கோடி அளவில் பணம் மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக ஏமாற்றப்பட்ட நபர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மும்பை, நாசிக், சூரத், அகமதாபாத், மாலேகான் உள்ளிட்ட நகரங்களில் 23 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here