பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித்: முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் பேட்டி

0
20

களத்​தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்​னிங்ஸை விளை​யாட விரும்​பு​கிறார் ரோஹித் சர்மா என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் முகமது கைஃப் தெரி​வித்​தார். இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடர் அண்​மை​யில் முடிவடைந்​தது. இதில் 2-1 என்ற கணக்​கில் ஆஸ்​திரேலிய அணி வென்று தொடரைக் கைப்​பற்​றியது.

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான இந்த ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர் தொடங்​கு​வதற்கு முன்​பாக இந்​திய அணி​யின் மூத்த வீர​ரான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ருக்கு பல்​வேறு அழுத்​தங்​கள் இருந்​தன. 2027-ம் ஆண்டு நடை​பெறவுள்ள ஒரு​நாள் உலகக்​கோப்பை போட்டி வரை ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோ​ரால் விளை​யாட முடி​யாது. இந்த ஒரு​நாள் தொடருடன் ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் அணியி​லிருந்து அனுப்​பப்​படு​வார் என்​றெல்​லாம் பேச்​சுகள் எழுந்​தவண்​ணம் இருந்​தன. ஆனால், இதுதொடர்​பாக எந்​த​வித கருத்​தை​யும் தெரிவிக்​காமல் இருந்த ரோஹித் சர்மா தனது பேட்​டால் அனை​வருக்​கும் பதிலடி கொடுத்​துள்​ளார்.

இந்​தத் தொடரில் முதல் போட்​டி​யில் 8 ரன்​களும், 2-வது போட்​டி​யில் 73 ரன்​களும், 3-வது போட்​டி​யில் ஆட்​ட​மிழக்​காமல் 121 ரன்​களும் குவித்​தார் இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்​மா. இந்​தத் தொடரில் 236 பந்​துகளைச் சந்​தித்​துள்​ளார்.

இதுகுறித்து தனி​யார் யூடியூப் சானலுக்கு இந்​திய கிரிக்​கெட் அணி முன்​னாள் வீரர் முகமது கைஃப் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தற்​போது முடிந்​துள்ள ஆஸ்​திரேலிய தொடரில் அவர் மிகச் சிறப்​பாக விளை​யாடி​னார். ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான 3 போட்​டிகள் கொண்ட தொடரில், அபார​மாக விளை​யாடி ஒரு​நாள் போட்​டிகளில் தனது திறமையை மீண்​டும் நிரூபித்​தார் ரோஹித். 7 மாதங்​களுக்​குப் பிறகு சர்​வ​தேச கிரிக்​கெட்​டுக்கு அவர் திரும்​பி​யுள்ள நிலை​யில், அவரது நிதான​மான, அதே நேரத்​தில் அபார​மான விளை​யாட்​டுத் திறனை களத்​தில் வெளிப்​படுத்​தி​னார்.

அவரது நிதான ஆட்​டம், கேப்​டன் பதவியைப் பற்​றியது என்று நான் நினைக்​கிறேன். இப்​போது அவர் ஒரு பேட்​ஸ்​மே​னாக மட்​டுமே விளை​யாடு​கிறார். தற்​போது அவர் அணி​யின் கேப்​டன் கிடை​யாது. அந்த அழுத்​தம் அவருக்​குக் குறைந்​துள்​ளது. முதல் பந்​திலேயே சிக்​ஸர் அடித்து முன்​னால் இருந்து வழிநடத்​தும் முன்​மா​திரியை அமைப்​ப​தன் மூலம் அவருக்கு அழுத்​தம் கொடுக்​கப்​படுவ​தில்​லை. இந்​தத் தொடரில் அவர் நிறைய பந்​துகளை எதிர்​கொண்டு விளை​யாடி​யுள்​ளார்.

தான் எடுக்​கும் ரன்​களின் எண்​ணிக்​கையை வைத்து மக்​கள் அவரை மதிப்​பிடு​வார்​கள் என்​பது ரோஹித் சர்​மாவுக்​குத் தெரி​யும். தற்​போது அவர் 20 பந்​துகளில் 40 ரன்​கள் எடுக்​கும் அதிரடி​யான விளை​யாட்டை விளை​யாட மாட்​டார் என்று எண்​ணுகிறேன். களத்​தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளை​யாட அவர் விழைகிறார். இதற்​காக அவர் பெரிய இன்​னிங்​ஸ்​களை விளை​யாட வேண்​டும் என்​பது அவருக்​குத் தெரி​யும்.

களத்​தில் அவர் நீண்ட நேரம் நின்று பெரிய ஸ்கோரை எடுக்க விரும்​பு​கிறார் என்​பது தெளி​வாகத் தெரி​கிறது. போட்​டி​யின்​போது அவர் குறை​வான ரிஸ்க்​கு​களை எடுத்து தனது இன்​னிங்ஸை ஆழமாக எடுத்​துச் செல்ல விரும்​பு​கிறார். முந்​தைய சில ஆட்​டங்​களில் நடந்​ததைப் போல தனது விக்​கெட்டை எளி​தில் இழக்க மாட்​டார் என்​பது இப்​போது தெளி​வாகி​யுள்​ளது.இவ்​வாறு கைஃப்​ தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here