நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 53), தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் பறக்கை சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளங்கடை பகுதியை சேர்ந்த தைபூ (30), ஷெருகான் (30) ஆகியோர் திடீரென வழி மறித்து தகராறு செய்தனர். மேலும் அய்யப்பனிடம் இருந்த செல்போன், ரூ. 2,200-ஐ பறித்து மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தைபூ, ஷெருகான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.














