தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் சந்தித்திருந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கருப்பு படத்துக்கான அனைத்தையும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் நிற்கிறேன். இப்போது அவரைத் தமிழ்நாட்டின் முதலமைச் சராகச் சந்திப்பது, ஏதோ கனவு போல உணர்கிறேன். அதே அன்பு, அதே அரவணைப்பு, அதே கனிவு, அதே நிதானம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் ரூ.300 கோடியை கடந்து வசூலித்து வருகிறது. இப்படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் தான் ஆர்.ஜே பாலாஜி கூறியிருந்தார். சில காரணங்களால் அது நடக்கவில்லை.
