சீனாவின் ஷாங்யூ நகரில் ஜூன் 20, 21-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 2-வது ஆசிய தொடர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக குரிந்தர்வீர் சிங் தலைமையிலான 29 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தடகள சம்மேளனம் 29 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை நேற்று வெளியிட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் ஆடவர் 4×400 தொடர் ஓட்டம், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டம், ஆடவர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டம், கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டம், மகளிர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டம், கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் இந்திய அணி பங்கேற்கும்.
அண்மையில் நடைபெற்ற தேசிய சீனியர் பெடரேஷன் தடகளப் போட்டியின் ஆடவர் 100 மீட்டர் பிரிவில் புதிய தேசிய சாதனை படைத்தவர் குரிந்தர் வீர் என்பது குறிப்பிடத்தக்கது.
