மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: கொசு உற்பத்தியை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – நீதிமன்றம் கேள்வி

0
14

மலேரி​யா, டெங்கு காய்ச்​சல் போன்ற நோய்​கள் பரவும் அபா​யம் உள்​ள​தால், தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்க எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த விஜய​ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் சமீப​கால​மாக கொசுக்களின் உற்​பத்தி பன்​மடங்கு அதி​கரித்து வரு​கிறது.

கொசுக்கடியால் குழந்​தைகளும், முதி​யோ​ரும் பெரிதும் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். சாக்​கடைகள் மட்​டுமின்றி வீட்​டுக்​குள் தேங்கி கிடக்​கும் கழி​வு நீரிலும் கொசுக்​களின் உற்​பத்தி அதி​கரித்து டெங்கு, மலேரி​யா, சிக்​குன்​குனியா போன்ற நோய்​கள் பரவும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இதேநிலை​தான் தமிழகம் முழு​வதும் உள்​ளது.

எனவே, மழைநீர் வடி​கால்​கள், கழி​வுநீர் கால்​வாய்​கள், கட்​டு​மானப் பகு​தி​களில் தேங்​கிக் கிடக்​கும் கழி​வுநீரை முறை​யாக அகற்றி தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்​க​வும், வீரியமிக்க கொசுக்​களை அழிக்​க​வும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்​கும், சென்னை மாநக​ராட்​சிக்​கும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அவர் கோரி​யிருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடை​பெற்​றது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் கார்த்​திகை பாலன் ஆஜராகி, கொசு உற்​பத்​தி​யால் தமிழகத்​தில்​தான் அதி​க​மான பாதிப்​பு​கள் ஏற்​பட்​டுள்ளன என்​பது குறித்த புள்​ளி​விவரங்​களை சமர்ப்​பித்​தார்.

அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத்தடுக்க என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து தமிழக அரசும், சென்​னை​யில் எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை குறித்து சென்னை மாநக​ராட்சி நிர்​வாக​மும் 3 வார காலத்தில்பதில் அளிக்க உத்தர​விட்ட நீதிப​தி​கள்​, வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here