ரைசிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கோப்பை – இந்தியா ‘ஏ’ அணி சாம்பியன்

0
22

ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலின் ரைசிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்​கெட் போட்டி பாங்​காக்​கில் நடை​பெற்று வந்தது. இதன் இறு​திப் போட்டியில் நேற்று நடப்பு சாம்​பிய​னான இந்​தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 20 ஓவர்​களில் 7 விக்கெட்கள் இழப்​புக்கு 134 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக தேஜல் ஹசாப்​னிஸ் 34 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்​களும், கேப்​டன் ராதா யாதவ் 30 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 36 ரன்​களும் விளாசினர்.

வங்​கதேச ‘ஏ’ அணி தரப்​பில் ஃபஹிமா கதுன் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 135 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த வங்​கதேச ‘ஏ’ அணி 19.1 ஓவர்​களில் 88 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஷாமினா சுல்​தானா 20, சர்​மின் சுல்​தானா 18, ஃபஹிமா கதுன் 14 ரன்​கள் சேர்த்​தனர்.

இந்​தியா ‘ஏ’ அணி தரப்​பில் பிரேமா ராவத் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். சோனியா மெந்​தி​யா, தனுஜா கன்​வர் ஆகியோர் தலா 2 விக்​கெட் கைப்​பற்​றினர். 46 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி 2-வது முறை​யாக கோப்​பையை வென்று சாம்​பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக்​ கொண்​டது.ரைசிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இந்தியா ‘ஏ’ அணியின் தேஜல் ஹசாப்னிஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here