கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புரம் பகுதியை சேர்ந்தவர் வில்பிரட் சாம்ராஜ் (60). இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவர் படத்தாலுமூட்டில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 14ஆம் தேதி இவர் படந்தாலுமூட்டில் இருந்து மார்த்தாண்டத்திற்கு ஆட்டோவில் சென்றார். அப்போது திருத்துவபுரம் பகுதியில் வைத்து எதிரே வந்த வாகனமும் ஆட்டோவும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வில்பிரட் சாம்ராஜ் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (செப்.,24) பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.