தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்க தீர்மானம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்

0
14

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரும் தீர்​மானத்​துக்கான நோட்​டீஸை நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் நேற்று சமர்ப்​பித்​தன.

கடந்த ஆண்டு பிப்​ர​வரி 19-ம் தேதி தலை​மைத் தேர்​தல் ஆணை​ய​ராக ஞானேஷ் குமார் பதவி​யேற்​றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெற்​றது.

இதைத் தொடர்ந்து தமிழ்​நாடு, மேற்​கு​வங்​கம், குஜ​ராத், மத்​திய பிரதேசம், ராஜஸ்​தான் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் அண்​மை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்​றது. இந்த மாநிலங்​களில் லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்டனர். இதற்கு காங்​கிரஸ், திரிண​மூல் காங்​கிரஸ், திமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

எஸ்​ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடை​பெறு​வ​தாக​வும், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக​வும் எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்டி வரு​கின்​றன. இந்த விவ​காரம் தொடர்​பாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யரை பதவி நீக்​கக் செய்​யக் கோரும் தீர்​மானத்​துக்​கான நோட்​டீஸை நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் நேற்று சமர்ப்​பித்​தன. இந்த நோட்​டீஸில் மக்​களவை​யின் 130 எம்​பிக்​கள், மாநிலங்​களவை​யின் 63 எம்​பிக்​கள் என மொத்​தம் 193 எம்​பிக்​கள் கையெழுத்​திட்டு உள்​ளனர்.

பத்து பக்​கங்​கள் கொண்ட நோட்​டீஸில் ஞானேஷ்கு​மார் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் சுமத்​தப்​பட்டு உள்​ளன. இதுகுறித்து சட்ட நிபுணர்​கள் கூறிய​தாவது:

கடந்த 1990-களில் டி.என்​.சேஷன் மற்​றும் 2006-ல் நவீன் சாவ்லா ஆகியோரை பதவி நீக்​கம் செய்​யக் கோரி விவாதங்​கள் எழுந்​தன. ஆனால் அவர்​களுக்கு எதி​ராக நாடாளு​மன்​றத்​தில் தீர்​மானம் கொண்டு வரப்​பட​வில்​லை. இந்​திய தேர்​தல் வரலாற்​றில் முதல்​முறை​யாக தற்​போதைய தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதி​ராக நோட்​டீஸ் வழங்​கப்​பட்டு உள்​ளது.

இந்த நோட்​டீஸை மக்​களவை சபா​நாயகரிடம் சமர்ப்​பிக்க குறைந்​த​பட்​சம் 100 எம்​பிக்​கள் கையெழுத்​திட வேண்​டும். தற்​போது வழங்​கப்​பட்​டிருக்​கும் நோட்​டீஸில் 130 எம்​பிக்​கள் கையெழுத்​திட்டு உள்​ளனர். இதே​போல மாநிலங்​களவை தலை​வரிடம் நோட்​டீஸை சமர்ப்​பிக்க 50 எம்​பிக்​கள் கையெழுத்​திட வேண்​டும். இதன்​படி 63 எம்​பிக்​கள் நோட்​டீஸில் கையெழுத்​திட்டு உள்​ளனர்.

இரு அவை​களி​லும் நோட்​டீஸ் ஏற்​கப்​பட்​டால் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி அல்​லது உச்ச நீதி​மன்ற நீதிப​தி, உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி, மூத்த சட்ட நிபுணர் அடங்​கிய சிறப்​புக் குழு அமைக்​கப்​படும். இந்த குழு அனைத்து தரப்​பினரிட​மும் விசாரணை நடத்​தும்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யருக்கு எதி​ரான குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரம் இருப்​ப​தாக சிறப்​புக் குழு கரு​தி​னால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் தீர்​மானம் கொண்டு வர அனு​மதி வழங்​கப்​படும். இதை நிறைவேற்ற மூன்​றில் இரு பங்கு எம்​பிக்​களின் ஆதரவு தேவை. ஒரு​வேளை தலை​மைத் தேர்​தல் ஆணை​யருக்கு எதி​ரான குற்​றச்​சாட்​டுக்கு மு​காந்​திரம் இல்லை என்று சிறப்பு குழு தீர்​மானித்​தால், நோட்​டீஸ் ரத்து செய்​யப்​படும். நா​டாளு​மன்​றத்​தில் தீர்​மானம்​ கொண்​டு வரப்​ப​டாது. இவ்​வாறு சட்​ட நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here