பிஹாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்

0
161

 பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்​படி 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்பு சான்​று, பாஸ்​போர்ட், குடி​யிருப்பு சான்று போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​து உள்​ளது.

இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்​னா​வின் சவுரி பகு​தி​யில் ‘டாக் பாபு’ என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடி​யிருப்பு சான்றிதழ் வழங்​கப்​பட்டு உள்​ளது. டாக் பாபு​வின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்​றிதழில் குறிப் பிடப்​பட்டு உள்​ளது.

இந்த சான்​றிதழில் பிஹார் வரு​வாய் துறை அதி​காரி முராரி சவு​கான் கையெழுத்​திட்டு உள்​ளார். அரசு அலு​வல​கத்​தின் கவுன்ட்டர் மூல​மாக நேரடி​யாக வழங்​கப்​பட்​டுள்ள சான்​றிதழில் நாயின் புகைப்​பட​மும் அச்​சிடப்​பட்டு உள்​ளது.

இந்த குடி​யிருப்பு சான்​றிதழ் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி, வைரலாக பரவி வரு​கிறது. இதைத் தொடர்ந்து நாய்க்கு வழங்​கப்​பட்ட குடி​யிருப்பு சான்​றிதழை பிஹார் வரு​வாய் துறை நேற்று ரத்து செய்​தது.

மேலும் நாயின் பெயரில் விண்​ணப்​பத்தை சமர்ப்​பித்த நபர் யார் என்​பது குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. தவறிழைத்த அரசு அலு​வலர்​கள் மீது துறை ரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று வரு​வாய் துறை தெரி​வித்​துள்​ளது.

புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்​துள்ளனர். குடி​யிருப்பு சான்​றிதழை தயார் செய்த கணினி ஊழியர், கையெழுத்​திட்ட வரு​வாய் அதி​காரி மற்​றும் அடை​யாளம் தெரி​யாத விண்​ணப்​ப​தா​ரர் ஆகியோர் வழக்​கில் சேர்க்​கப்​பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஆட்​சி​யர் டாக்​டர் தியாக​ராஜன் கூறும்​போது, ‘எதிர்​காலத்​தில் இது​போன்ற தவறுகள் நடை​பெறாமல் இருக்க, தவறிழைத்த ஊழியர்​கள் மற்​றும் அதி​காரி​கள் மீது மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று தெரி​வித்​தார். ஸ்வராஜ் இந்​தியா கட்​சி​யின் தலை​வர் யோகேந்​திர யாதவ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிஹார் வாக்​காளர் பட்டியல் திருத்​தப் பணி​யின்​போது இந்​திய குடி​யுரிமையை நிரூபிக்க குடி​யிருப்பு சான்​றிதழ் ஏற்​றுக் கொள்​ளப்​படு​கிறது.

தற்​போது பாட்​னா​வில் ஒரு நாய், குடி​யிருப்பு சான்​றிதழை பெற்​றிருக்​கிறது. மோசடி வழி​யில் ஆதார், ரேஷன் அட்​டைகளை பெற முடி​யும் என்று தேர்​தல் ஆணை​யம் கூறுகிறது. தற்​போது பிஹாரில் நாய்க்கு குடி​யிருப்பு சான்று வழங்​கப்​பட்டுள்​ளது. இதற்கு தேர்​தல்​ ஆணை​யமே பதில்​ அளிக்​க வேண்​டும்​’’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here