நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பெரும் செல்வவிளை என்ற பகுதியில் வேம்பனூர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரை வழியாக பெருஞ்செல்வ விளை சந்திப்பிலிருந்து ஆசாரி பள்ளத்திற்கு சாலை ஒன்று செல்கிறது.
இந்த சாலையில் தினந்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பைக், கார் போன்ற வாகனங்களில் நாகர்கோவில் பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் குறுகலான நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் அடுத்தடுத்து இரண்டு மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. வேகமாக வரும் வாகனங்கள் சாலையை ஒட்டி நிற்கும் இந்த மின்கம்பங்களில் மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவ்வாறு நடந்தால் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த இரண்டு மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரத்தில் நட வேண்டும் என்று மின்வாரியத்திற்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.