மழையால் தவிக்கும் மக்களுக்கு உதவ ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ மீண்டும் அமைப்பு: பழனிசாமி அறிவிப்பு

0
234

சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ (Rapid ResponseTeam) மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதியில் உள்ளஅதிமுக தன்னார்வலர்களை எப்போது வேண்டுமானாலும் மக்கள் அணுகி உதவி பெறலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு மக்களைக் கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவேதான், மக்களுக்கு உதவ அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் Rapid ResponseTeam அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்றது.

தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மீண்டும் அந்த டீம் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை மக்கள் இந்த கடுமையான தருணத்தில், தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள அதிமுக தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அதிமுக உழைக்கும் என்று பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here