‘வாடகையக் கூட்டு… கடையக் காலி பண்ணு..!’ – ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்துக்கு வந்த சோதனை

0
188

ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்டை வைத்து இப்போது கிளம்பியுள்ள பிரச்சினையால் நூலகத்தின் தனித்தன்மைக்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் வாசிப்பு ஆர்வலர்கள்.

1875-ல் திருநெல்​வேலி ஆட்​சி​ய​ராக இருந்த பென்​னிங்​டன் என்​பவ​ரால் ஸ்ரீவில்​லிபுத்​தூரில் பொது நூல​கம் தொடங்​கப்​பட்​டது. அவரது பெய​ராலேயே திறக்​கப்​பட்ட இந்த நூல​கத்​தின் நிர்​வாகச் செல​வு​களுக்​காக வணிக வளாகம் ஒன்​றும் பிற்​பாடு கட்​டப்​பட்​டது.

ஸ்ரீவில்​லிபுத்​தூர் பேருந்து நிலை​யம் எதிரே உள்ள இந்த வணிக வளாகத்​தில் காய்​கறி மார்க்​கெட் உட்பட 150 கடைகள் உள்​ளன. இந்த மார்க்​கெட் நகரின் மையத்​தில் இருப்​ப​தால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை தவிர்க்க மாற்று இடத்​தில் நகராட்சி சார்​பில் மார்க்​கெட் வளாகம் திறக்​கப்​பட்​டது. ஆனால், முதல்​வர் கையால் திறந்து வைத்து ஓராண்​டாகி​யும் இந்த மார்க்​கெட்​டுக்கு போக வியா​பாரி​கள் யாரும் தயா​ராய் இல்​லை.

இந்​நிலை​யில், பென்​னிங்​டன் வணிக வளாக கடைகளுக்கு வாடகையை உயர்த்​து​வது, வாடகை செலுத்​தாத கடைகளை காலி செய்​வது உள்​ளிட்ட நடவடிக்​கை​களை எடுக்க பென்​னிங்​டன் கமிட்டி நிர்​வாகி​களுக்கு உத்​தர​விட்​டார் நூல​கத்​தின் பதவி வழி தலை​வ​ரான மாவட்ட ஆட்​சி​யர். இதில் ஏற்​பட்ட பிரச்​சினை​யால் பென்​னிங்​டன் கமிட்டி செய​லா​ளர் சண்​முக​நாதன் உள்​ளிட்ட 7 நிர்​வாகி​கள் பொறுப்​பு​களை ராஜி​னாமா செய்​தனர். இதையடுத்து 14 பேர் கொண்ட புதிய கமிட்டி ஒன்றை மாவட்ட ஆட்​சி​யர் பரிந்​துரை செய்​தார். ஆனால், இந்​தக் கமிட்​டியை புறந்​தள்​ளி​விட்டு ராதாசங்​கர் என்​பவரை தலை​வ​ராக​வும் முத்​துப்​பட்​டர் என்​பவரை துணைத் தலை​வ​ராக​வும் போட்டு 11 பேர் கொண்ட புதிய நிர்​வாகக் குழு பொறுப்​பேற்​றுக் கொண்​டது. அத்​துடன், பென்​னிங்​டன் கமிட்டி நிர்​வாகத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் தலை​யிட முடி​யாது என்று சொல்லி உயர் நீதி​மன்​றத்தை நாடிய புதிய நிர்​வாகக் குழு, ஆட்​சி​யரின் பரிந்​துரைக்கு தடை​யாணை​யும் பெற்​றது.

இதையடுத்​து, தனது ராஜி​னா​மாவை திரும்​பப் பெறு​வ​தாக கிளம்பி வந்த முந்​தைய செய​லா​ளர் சண்​முக​நாதன், புதிய நிர்​வாகி​களான ராதாசங்​கர், முத்​துப்​பட்​டர் மீது போலீ​ஸில் புகாரளித்​தார். இந்த நிலை​யில், மிகப் பழமை​யான மார்க்​கெட் கட்​டிடம் பரா​மரிப்பு இல்​லாமல் சேதமடைந்​திருப்​ப​தாகச் சொல்லி அதை இடிக்க உத்​தர​விட்​டார் சார் ஆட்​சி​யர். பென்​னிங்​டன் கமிட்​டி​யின் புதிய நிர்​வாகி​கள் இதற்​கும், கமிட்​டி​யின் 20 ஆண்டு கணக்​கு​களை வெள்ளை அறிக்​கை​யாக கேட்ட ஆட்​சி​யரின் கடிதத்​திற்​கும் நீதி​மன்​றத்​தில் தடை​யாணை பெற்​ற​னர்.

இதனிடையே பென்​னிங்​டன் கமிட்​டிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர் ஜெயசீலன் எழு​திய கடிதத்​தில், ‘பென்​னிங்​டன் கமிட்டி நிர்​வாகத்​தின் வெளிப்​படை தன்மை மற்​றும் கமிட்​டி​யின் நோக்​கம் சிதை​யாமல் செயல்​படு​வதை உறுதி செய்ய வேண்​டிய தார்​மீகப் பொறுப்பு கமிட்​டி​யின் பதவி வழி தலை​வ​ரான மாவட்ட ஆட்​சி​யருக்கு இருப்​பதை நீதி​மன்​றம் ஏற்​றுக் கொண்​டுள்​ளது.

சமீப கால​மாக நிர்​வாக கமிட்​டி​யில் நிர்​வாகி​களுக்​குள் ஏற்​பட்டு வரும் பிரச்​சினை​களால் கமிட்​டிக்​கும், அதன் தலை​வ​ராக உள்ள மாவட்ட ஆட்​சி​யருக்​கும் அவப்​பெயர் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் கமிட்​டி​யின் செயல்​பாடு​களில் வெளிப்​படைத்​தன்மை வேண்​டியது அவசி​ய​மாகிறது’ எனக் குறிப்​பிட்​டிருந்​தார்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய பென்​னிங்​டன் கமிட்டி நிர்​வாகி​கள் சிலர், “பென்​னிங்​டன் கமிட்​டியை கைப்​பற்ற நகராட்சி தரப்​பில் கடந்த காலங்​களில் எடுக்​கப்​பட்ட முயற்​சிகள் நீதி​மன்​றத்​தின் மூலம் தடுக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போதும் அது​போல கைப்​பற்​றவே தேவையற்ற நெருக்​கடிகளை கொடுத்து வரு​கி​றார்​கள். அதனால் தான் நீதி​மன்​றத்​தின் கதவு​களை தட்டி இருக்​கி​றோம்” என்​ற​னர்.

உயரிய நோக்​கத்​துக்​காக ஆரம்​பிக்​கப்​பட்ட பென்​னிங்​டன் நூல​கத்​துக்​கும் அது சார்ந்த கமிட்​டிக்​கும் கோடிக் கணக்​கில் இப்​போது சொத்து இருக்​கிறது. அதை வைத்து நூல​கத்தை மேம்​படுத்​தும் வேலை​களை செய்ய வேண்​டும். எக்​காரணத்​தைக் கொண்​டும் நூல​கம் அரசி​யல்​வா​தி​களின் கைகளுக்​குள் போய்​விடக் கூடாது என்​பதே வாசிப்பு நேசர்​களின் ஒரே கவலை​யாக இருக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here