Home சினிமா செய்திகள் நயன்தாரா – கவினின் ‘ஹாய்’ ரிலீஸ் ஆக.28-க்கு தள்ளிவைப்பு!

நயன்தாரா – கவினின் ‘ஹாய்’ ரிலீஸ் ஆக.28-க்கு தள்ளிவைப்பு!

0

அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நயன்தாரா – கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பல பல சூப் வாங்கின பாய் ஆகஸ்ட் 28-ல் உங்களை சந்திக்கிறான்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.

வீடியோவில், ரிலீஸ் தேதி அறிவிப்பு என ஆங்கிலத்தில் வருகிறது. அடுத்து  மறு அறிவிப்பு என்று வார்த்தைகள் மாறுகிறது. பின்பு திரையில்  நயன்தாராவும் கவினும் அமர்ந்து விவாதம் நடத்தி படத்தின் மாறிவிட்ட வெளியீட்டு தேதியை வேடிக்கையாக அறிவிக்கின்றனர். அதன்படி, அடுத்த வாரத்தில் வெளியாக இருந்த படம் மீண்டும் தள்ளிப்போய் ஆக.28-ம் தேதி வெளியாக இருக்கிறது.

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்​தா​ரா, கவின் முதன்மை பாத்திரங்​களில் நடித்​துள்ள படம் ‘ஹாய்’. இந்தப் படத்தில் பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்​கு​மார், விடிவி கணேஷ், சத்​யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். படத்துக்கு ராஜேஷ் சுக்லா ஒளிப்​ப​திவு செய்​துள்ளார். ஜென் மார்ட்​டின் இசையமைத்​துள்​ளார்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்​சர்​ஸ்​, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் நயன்​தா​ரா, விக்​னேஷ் சிவன், எஸ்.எஸ்.லலித்​கு​மார் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

இப்​படத்​தின் பாடல் ஏற்கெனவே வெளி​யாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ஆகஸ்ட் 14-ல் வெளி​யாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 28 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version