சிறுவனை கட்டிலுடன் பள்ளிக்கு தூக்கி சென்ற உறவினர்கள்

0
9

பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனை, அவனது உறவினர்கள் கட்டிலுடன் பள்ளி வரை தூக்கிச் சென்ற வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் கட்டிலில் படுத்தபடி அடம்பிடித்தான்.
இதைப் பார்த்த அவனது உறவினர்கள் இருவர் சிறுவனை கட்டிலுடன் தூக்கிச் சென்று பள்ளி வாசலில் வைத்தனர். அழுது கொண்டு கட்டிலில் தொங்கியபடி இருந்த மாணவனை மற்ற மாணவர்கள் பார்த்து சிரித்தபடி சென்றனர்.

அதன்பின் பள்ளியில் இருந்து ஆசிரியர் ஒருவர் வந்து மாணவனை உள்ளே அழைத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here