Home தேசிய செய்திகள் ஸ்ரீகுருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 437 திருமணங்கள் நடைபெற்று சாதனை

ஸ்ரீகுருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 437 திருமணங்கள் நடைபெற்று சாதனை

0

கேரளா​வின் குருவாயூர் தேவசம் வாரி​யத் தலை​வர் ஏ.வி. கோபி​நாத் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஞாயிறு) 437 திருமணங்கள் நடை​பெற்​றன. கோயில் வரலாற்​றில் இவ்​வளவு அதி​க​மான திரு​மணங்​கள் ஒரே நாளில் நடை​பெற்​றது இதுவே முதல்​முறை. திரு​மணங்​கள் நடை​பெறும் இந்த மங்​களகர​மான நிகழ்​வுக்கு பொது​மக்​கள் மிகுந்த ஆதரவு அளித்​தனர்.

திரு​மணங்​களுக்​குத் தேவை​யான அனைத்து வசதி​களை​யும் தேவசம் நிர்​வாகம் ஏற்​பாடு செய்​திருந்​தது. கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். உடல்​நலக் குறைவு ஏற்​படு​வோருக்கு உதவ மருத்​து​வர்​கள் பணி​யமர்த்​தப்​பட்​டனர்.

திருமண நிகழ்ச்​சிகள் அதி​காலை 4.10 மணிக்​குத் தொடங்​கின. முதல் 2 மணி நேரத்​திலேயே சுமார் 137 திரு​மணங்​கள் நடை​பெற்​றன. திரு​மணங்​களை நடத்​து​வதற்​காக கோயில் வளாகத்​தில் 6 மண்​டபங்​கள் அமைக்​கப்​பட்​டன. ஒவ்​வொரு திரு​மணக் குழு​வுக்​கும் தனித்​தனி டோக்​கன்​கள் வழங்​கப்​பட்​டன.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க மணமகன், மணமகள் ஆகியோ​ருடன் கோயிலுக்​குள் வருபவர்​களின் எண்​ணிக்கை 24 பேர் என கட்​டுப்​படுத்​தப்​பட்​டது. 6 மண்​டபங்​களி​லும் சேர்த்து ஒவ்​வொரு மணி நேரத்​துக்​கும் 60-க்கும் மேற்​பட்ட திரு​மணங்​கள் நடை​பெற்​றன. இவ்​வாறு கோபி​நாத் கூறி​னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version