Home தேசிய செய்திகள் ஓராண்டுக்கு நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – செப்டம்பர் மாதம் தொடங்குகிறது

ஓராண்டுக்கு நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – செப்டம்பர் மாதம் தொடங்குகிறது

0

நாடு முழு​வதும் போதைப்​பொருள் கடத்​தலை ஒழிக்கும் நோக்​கில், வரும் செப்​டம்​பர் மாதம் முதல் ஓராண்​டுக்கு சோதனை​களை நடத்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்​ட​மிட்​டுள்​ளது.

போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​களை முற்​றி​லு​மாக ஒழிக்​கும் நோக்​கில், செப்​டம்​பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்​திற்கு நாடு தழு​விய 24 சிறப்​புப் பதினைந்து நாள் அதிரடி நடவடிக்​கைகளுக்​கான கால அட்​ட​வணையை மத்​திய போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவு வெளி​யிட்​டுள்​ளது.

ஆகஸ்ட் 16 முதல் பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடையே விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் தொடங்கி நடை​பெற்று வரும் நிலை​யில், செப்டம்​பர் மாதம் முதல் அமலாக்க நடவடிக்​கைகள் தொடங்கவுள்​ளன.

முதற்​கட்​ட​மாக, போதைப்​பொருள் குற்றங்களில் ஈடு​பட்​டுள்ள வெளி​நாட்​டினரைக் கண்​டறிந்து நாடு​கடத்​தும் பணி மேற்​கொள்​ளப்​படும். அதைத் தொடர்ந்​து, தலைமறை​வாக உள்ள போதைப்​பொருள் குற்​ற​வாளி​களைக் கைது செய்​யும் 15 நாள் தீவிர இயக்​கம் நடை​பெறும்.

அக்​டோபர் மாதம் முதல், மருந்​தகங்​களில் மருத்​து​வப் பொருட்​கள் போதைப்​பொருள் தயாரிப்​புக்கு திசை​மாற்​றப்​படு​வதைத் தடுக்கும் வகை​யில், மாநில மருந்​துக் கட்​டுப்​பாட்டு அதிகாரிகளுடன் இணைந்து போதைப்​பொருள் தடுப்​புப் பிரிவினர் தீவிர ஆய்வு நடத்​து​வர். தொடர்ந்​து, தலைமறைவு குற்றவாளி​கள் மீது முழு விவரக் கோப்​பு​கள் தயாரித்​தல் மற்​றும் கடலோர மக்​களிடையே கடல்​வழி போதைப்​பொருள் வர்த்​தகம் குறித்த விழிப்​புணர்வு பிரச்​சா​ரங்​கள் நடத்​தப்​படும்.

டிசம்​பர் இரண்​டாம் பாதி​யில், நாட்​டின் அனைத்து தரை, கடல் மற்றும் விமான நிலையங்களின் சோதனைச் சாவடிகளில் ஒருங்கிணைந்த தீவிர சோதனை​கள் மேற்​கொள்​ளப்​படும். 2027 ஜனவரி இரண்​டாம் பாதி​யில் சட்​ட​விரோதப் பயிர்ச் சாகுபடிகளைக் கண்​டறிந்து அழிக்​கும் பணி​யும், பிப்​ர​வரி முதல் பாதி​யில் மூலப்​பொருள் ரசாயனங்​கள் திசை​மாறாமல் தடுக்க ரசாயனத் தொழிற்​சாலைகளில் விழிப்​புணர்வு இயக்​க​மும், பிப்ரவரி இரண்​டாம் பாதி​யில் சிறைச்​சாலைகளில் கூட்டு ஆய்வுகளும் நடை​பெறும்.

இந்த ஒருங்​கிணைந்த விழிப்​புணர்​வுப் பிரச்​சா​ரங்​கள், அமைப்புகளுக்கு இடையி​லான ஒத்​துழைப்பை வலுப்​படுத்தி பொது​மக்​களிடையே விழிப்​புணர்வை அதி​கரிக்​கும். அத்​துடன் ‘தேசிய போதைப்​பொருள் தடுப்பு தொலைநோக்கு ஆவணம் 2026-29’-ன் கீழ் ஏற்​கெனவே நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்​கு​களுக்​குத் துணை​யாக அமைந்​து, ‘போதை​யில்லா பாரதம்’ இலக்கை அடைய பெரிதும் உதவும்​ என மத்​தி​ய போதைப்​பொருள்​ தடுப்​புப்​ பிரிவு தெரிவித்துள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version