சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயத்தை விரைந்து குணப்படுத்தும் பிராணவாயு சிகிச்சை

0
310

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்பட்ட தீக்காயங்களை விரைவாககுணப்படுத்த உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப் படுகிறது. நோயாளிகள் டிவி பார்த்து கொண்டே சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த சிறப்பு தீக்காய பிரிவு மற்றும் அதிநவீன உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. நீண்ட நாட்களாக குணமாகாமல் இருக்கும் காயங்களை சரி செய்ய நோயாளிகளுக்கு உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை மூலம் நோயாளிகளின் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் 3 மடங்கு சீராக வழங்கப்படுகிறது. இதனால் தீக்காயம் மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும்காயங்கள் விரைவில் குணப்படுத் தப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள தீக்காய பிரிவில்உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சைகருவியை கடந்த மாதம் சுகா தாரத்துறை மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை கருவி மூலம் இதுவரை 54 பேர் பயனடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவ மனை தீக்காயப் பிரிவு தலைவர் மருத்துவர் பி.நெல்லையப்பர் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சைகருவி ரூ.1.17 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம்இதுவரை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 54 நோயாளிகளுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தீக்காயம் மற்றும் நீரிழிவுநோயால் ஏற்பட்ட காயங்களால்அவதிப்பட்டு வந்த நோயாளிகளுக்கு உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை கருவி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு களைப்பு தெரியாமல் இருப்ப தற்காக, சிகிச்சையின் போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை டிவி மூலம் நோயாளிகள் பார்த்து ரசிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி பெரிய கண்ணாடி பெட்டியில் வைத்து முழுவதுமாக மூடப்படுவார்கள். பின்னர், உயர் அழுத்த பிராண வாயுவை கண்ணாடி பெட்டியில் செலுத்தி சிகிச்சை தொடங்கும். கருவியின் உள்ளே இருக்கும் நோயாளியிடம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வெளியில் இருந்து சிறிய மைக் மூலம் தொடர்பு கொண்டு பேசுவார்கள். உயர் அழுத்த பிராணவாயு சிகிச்சை நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here