ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா – தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி

0
18

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – விதர்பா அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 291 ரன்​களும், விதர்பா 501 ரன்​களும் குவித்​தன. 210 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழ்​நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 89 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 233 ரன்​கள் எடுத்​திருந்த போது ஆட்​டம் டிரா​வில் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது.

ஆதிஷ் 46, விமல் குமார் 9, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 14, ஆந்த்ரே சித்​தார்த் 11, ஷாருக் கான் 40, முகமது அலி 25 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பாபா இந்​திரஜித் 189 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​களும், கேப்​டன் சாய் கிஷோர் 4 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​ற​தால் விதர்பா அணிக்கு 3 புள்​ளி​கள் கிடைத்​தது. தமிழ்​நாடு அணிக்கு ஒரு புள்ளி வழங்​கப்​பட்​டது.

இன்​னிங்ஸ் வெற்றி: ‘பி’ பிரி​வில் மங்​கலாபுரத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் கர்​நாடகா அணி இன்​னிங்ஸ் மற்​றும் 164 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் கேரளா அணியை வீழ்த்​தி​யது. இந்த போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் கர்​நாடகா 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 586 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​திருந்​தது. கருண் நாயர் 233 ரன்​களும், ரவிச்​சந்​திரன் சம்​ரன் 220 ரன்​களும் விளாசி​யிருந்​தனர். கேரளா அணி முதல் இன்​னிங்​ஸில் 238 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் பெற்​றது. அந்த அணி 2-வது இன்​னிங்​ஸில் 184 ரன்​களுக்கு சுருண்​டது. ஆட்ட நாயக​னாக கருண் நாயர் தேர்​வா​னார்.

ஜெய்​ஸ்​வால் சதம்: ‘டி’ பிரி​வில் ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை – ராஜஸ்​தான் அணி​கள் மோதின. இதன் முதல் இன்​னிங்​ஸில் மும்பை 254 ரன்​களும், ராஜஸ்​தான் 617 ரன்​களும் எடுத்​தன. 363 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய மும்பை அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 82 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 269 ரன்​கள் எடுத்​திருந்த போது போட்டி டிரா​வில் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது. தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 174 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 18 பவுண்​டரி​களு​டன் 156 ரன்​கள் விளாசி​னார். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​ற​தால்​ ராஜஸ்​தான்​ அணி 3 புள்​ளி​களை பெற்​றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here