ரஞ்சி கிரிக்​கெட் போட்டி: பரோடா அணிக்​கெ​தி​ராக தமிழ்​நாடு அணி ரன் குவிப்பு

0
47

ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யில் பரோடா அணிக்​கெ​தி​ராக தமிழ்​நாடு அணி தனது முதல் இன்​னிங்​ஸில் 7 விக்​கெட் இழப்​புக்கு 411 ரன்​கள் குவித்​துள்​ளது. இதன்​மூலம் தமிழக அணி 36 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்​ளது.

பரோ​டா, தமிழ்​நாடு அணி​களுக்கு இடையி​லான இந்​தப் போட்டி சேலம் எஸ்​சிஎஃப் கிரிக்​கெட் மைதானத்​தில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்​கியது.

முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய பரோடா அணி 375 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து தமிழ்​நாடு அணி தனது முதல் இன்​னிங்ஸை விளை​யாடத் தொடங்​கியது. 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் தமிழ்​நாடு அணி விக்​கெட் இழப்​பின்றி 118 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 3-ம் நாள் ஆட்​டத்தை அதிஷ் 42 ரன்​களு​ட​னும், விமல் குமார் 66 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் அதிஷ் ஆட்​ட​மிழந்​தார். ஆனால் அதன் பின்​னர் விமல்​கு​மாருடன் ஜோடி சேர்ந்த பிரதோஷ் ரஞ்​சன் பால் சிறப்​பாக விளை​யாடி​னார்.

பிரதோஷ் ரஞ்​சன் பால் 80 ரன்​கள் எடுத்​திருந்​த​போது ஆட்​ட​மிழந்​தார். தொடக்க ஆட்டக்காரர் விமல் குமார் அதிரடி​யாக விளை​யாடி சதமடித்​தார். அவர் 334 பந்​துகளில் 182 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். ஆந்த்ரே சித்​தார்த் 7, அஜிதேஷ் குரு​சாமி 15, சோனு யாதவ் 15, சாய்​கிஷோர் 18 ரன்​கள் எடுத்​தனர். நிதிஷ் ராஜகோ​பால் 31 ரன்​களு​ட​னும், பி.​வித்​யுத் ரன் கணக்​கைத் தொடங்​காமலும் களத்​தில் உள்​ளனர்.

பரோடா அணி தரப்​பில் மகேஷ் பித்​தியா 4 விக்​கெட்​களை​யும், பார்​கவ் பட் 2 விக்​கெட்​களை​யும், நினத் அஸ்​வின்​கு​மார் ரத்வா ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தி​னார். முதல் இன்​னிங்​ஸில் 36 ரன்​கள் முன்​னிலை பெற்ற நிலை​யில் தமிழ்​நாடு அணி இன்று கடைசி நாள் ஆட்​டத்தை விளை​யாட​வுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here