ஹாக்கியில் ராமநாதபுரம் சையது அம்மாள் அணி சாம்பியன்

0
261

தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்கின் மாநில அளவிலான தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இதன் இறுதிப் போட்டியில் நேற்று ராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி – மதுரை மண்டல ஒருங்கிணைந்த அணிகள் மோதின. இதில் சையதுஅம்மாள் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி தரப்பில் சிவஸ்ரீதர் (13-வது நிமிடம்), சுக்கிந்தன் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். வெற்றி பெற்ற அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலீப் திர்கே, தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், சாய்ராம் நிறுவனத்தின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here