Home கன்னியாகுமரி செய்திகள் ராஜகமங்கலம்: குளத்தில் தலை இல்லாத குழந்தையின் சடலம்

ராஜகமங்கலம்: குளத்தில் தலை இல்லாத குழந்தையின் சடலம்

0

ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பகுளத்தில் நேற்று (செப்.11)  மதியம் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம அலுவலரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சுமார் 1 மாத குழந்தை என கருதப்படும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version