மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, யோவானின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி அந்தப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் சத்தம் போட்டதும், கத்தியை காட்டி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த டிராவிட் ஷெர்லின் (26) என்பவரை கைது செய்தனர்.
