கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியை கைப்பற்ற ஷிண்டே சிவசேனாவுக்கு ராஜ் தாக்கரே கட்சி ஆதரவு

0
86

கல்​யாண் டோம்​பி​விலி மாநக​ராட்​சி​யில் அதி​காரத்​தைக் கைப்​பற்​று​வதற்கு துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனா கட்​சிக்கு ராஜ் தாக்​கரே தலை​மையி​லான நவநிர்​மாண் சேனா (எம்​என்​எஸ்) கட்சி ஆதரவு கொடுத்​துள்​ளது.

மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த 15-ம் தேதி நடை​பெற்ற பல்​வேறு நகராட்​சிகள், மாநக​ராட்​சிகளுக்​கான உள்​ளாட்​சித் தேர்​தலில் மகா​யுதி கூட்​ட​ணிக் கட்​சிகள் இணைந்​துப் போட்​டி​யிட்​டன. அதே​போல் முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, எம்​என்​எஸ் கட்​சிகள் இணைந்து போட்​டி​யிட்​டன.

இந்​நிலை​யில் 122 கவுன்​சிலர்​கள் கொண்ட கல்​யாண் டோம்பிவிலி (கேடிஎம்​சி) மாநக​ராட்​சி​யில் நடை​பெற்ற தேர்​தலில் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனா கட்சி 53 வார்​டு​களில் வெற்றி பெற்​றது. பாஜக 50 வார்​டு​களில் வெற்றி பெற்​றது. எம்​என்​எஸ் கட்சி 5 வார்​டு​களி​லும், சிவசேனா (உத்​தவ்) 11 வார்​டு​களி​லும், காங்​கிரஸ் 2 வார்​டு​களி​லும், தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்) ஒரு வார்​டிலும் வெற்றி பெற்​றது.

இந்​நிலை​யில் கல்​யாண் டோம்​பி​விலி மாநக​ராட்​சி​யில் எம்என்எஸ் கட்​சி, சிவசே​னா​வுக்கு (ஷிண்​டே) ஆதரவு தரு​வ​தாக அறிவித்துள்​ளது என்று சிவசேனா எம்​.பி. ஸ்ரீகாந்த் ஷிண்​டே நேற்று அறிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here