Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில்:அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை

குமரியில்:அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை

0

உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு தமிழகம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று, நாளை, நாளை மறுதினம் (ஏப்ரல் 10,11, 12) ஆகிய மூன்று தினங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இன்று (ஏப்ரல் 10) புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version