டெல்லி கேபிடல்ஸ் அணிக்​காக தொடக்க வீர​ராக களமிறங்​கும் ராகுல்

0
16

டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணிக்​காக வரும் சீசனில் மீண்​டும் தொடக்க வீர​ராக கே.எல்​.​ராகுல் களமிறங்​க​வுள்​ளார் எனத் தெரிய​வந்​துள்​ளது. கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணி​யில் இடம்​பிடித்​திருந்த கே.எல்​.​ராகுல் 4-வது வீர​ராக களமிறங்கி விளை​யாடி​னார்.

கடந்த சீசனில் 13 ஆட்​டங்​களில் விளை​யாடிய அவர் 539 ரன்​கள் குவித்து அந்த அணி​யில் அதிக ரன்​கள் குவித்த வீரராக மாறி​னார். குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் அவர் சதமும் விளாசி​னார்.

கடந்த சீசனில் 4-வது வீர​ராக ராகுல் களமிறங்​கிய நிலையில், தொடக்க வீரர்​கள் சரி​யாக விளை​யா​டாத காரணத்​தால் பல போட்​டிகளில் டெல்லி அணி தோல்வி காண நேரிட்​டது. இதையடுத்து மீண்​டும் ராகுலை தொடக்க வீர​ராக களமிறக்க டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது.

அணி​யின் கேப்​ட​னாக அக்​சர் படேல் செயல்​படு​வார் என்றும் கே.எல்​.​ராகுலுடன் பென் டக்​கெட் அல்​லது பதும் நிசங்கா தொடக்க வீர​ராக களமிறங்க வாய்ப்​புள்​ளது என்றும் டெல்லி கேபிடல்​ஸ் அணி வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here