Home தேசிய செய்திகள் ராகுல் மிக ஆபத்தான மனிதர்: அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்

ராகுல் மிக ஆபத்தான மனிதர்: அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்

0

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். அத்துடன் மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகளைச் சந்தித்துப் பேசுகிறார்.

இந்த நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிக ஆபத்தான மனிதராக ராகுல் காந்தி இருக்கிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். இதுபோன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவரை இந்த நாடு இதுவரை பார்த்ததில்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் வலிமையான தலைவர்கள் இருந்தார்கள். ஆனால், மெதுவாக காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி போலாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version