Home தேசிய செய்திகள் பொதுத் துறை வங்கிகள் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: நிர்மலா சீதாராமன் விளக்கம்

பொதுத் துறை வங்கிகள் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: நிர்மலா சீதாராமன் விளக்கம்

0

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பொதுத் துறை வங்கிகள் குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்” பொதுத் துறை வங்கிகள் தனியார் நிதியாளர்களைப் போல பணக்காரர்களுக்கும், பலம்வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகின்றன. பொதுத் துறை வங்கிகளுக்கு மக்களை நலனை விட லாபம் ஈட்டுவதற்கே அதிக அழுத்தம் தரப்படுகிறது. இதனால், அவர்கள் மக்களுக்கு திறம்பட பணியாற்ற முடிவதில்லை. இதைத்தவிர, பணியாளர் பற்றாக்குறையும் வங்கிகளின் பணிச்சூழலை எதிர்மறை மிகுந்ததாக மாற்றியுள்ளது. சமவாய்ப்பு தரப்படாமல் பொது துறை வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவது சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் பக்கத்தில் அளித்துள்ள விரிவான விளக்கத்தில் ” பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டின் வங்கித் துறை அதிலும் குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளை சாத்தியமாக்கி காட்டியுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக் காலத்தில்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அதன் முதலாளிகளுக்கு கண்மூடித்தனமாக கடன் வழங்கி பொதுத் துறை வங்கிகளின் நிலையை கவலைக்குரியதாக மாற்றியதை ராகுலை சந்தித்த யாரும் சொல்லவில்லையா? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அவர்களது கூட்டாளிகளுக்கும், நிழல் தொழிலதிபர்களுக்கும் பொதுத் துறை வங்கிகள் ஏடிஎம்கள் போல செயல்பட்டன.

2014-லிருந்து பொதுத் துறை வங்கிகளுக்கு 3.94 லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 2024 நிலவரப்படி, பொதுத் துறை வங்கி பணியிடங்களில் 96.6% பேர் அதிகாரிகள் பதவியிலும், 96.7% பேர் துணை பணியாளர்களாகவும் உள்ளனர். இந்த தரவு அந்த துறையில் மிகக் குறைவான காலியிடங்கள் இருப்பதையே காட்டுகிறது.

வங்கிகள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு துறைகளிலும் ரோஜ்கர் மேளா முன்னெடுப்பு மூலம் லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதை ராகுலை சந்தித்தவர்கள் அவரிடம் தெரிவிக்கவில்லையா?” என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version