Home தேசிய செய்திகள் பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கியை பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம்

பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கியை பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம்

0

பிஹாரில் நீட் வினாத்​தாள் கசிவு, தேர்வு முறை​கேடு மற்​றும் வேலை​வாய்ப்பு கோரி எதிர்க்​கட்​சிகள் ஆதர​வுடன் கடந்த ஜூலை 25-ம் தேதி பந்த் நடை​பெற்​றது.

சிவான் மாவட்​டத்​தில் நடந்த போராட்​டத்​தின்​போது, காவல் துறையினர் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் காயமடைந்த மாணவர்கள், கடந்த வியாழக்​கிழமை டெல்லி சென்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தியை அவரது இல்​லத்​தில் சந்தித்​துப் பேசினர். அப்​போது அவர்​களுக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்​டறிந்​ததுடன், அவர்களுக்கு ஆறு​தல் கூறி​னார்.

இந்​நிலை​யில், இது தொடர்​பான படங்​கள் மற்​றும் வீடியோவை தனது சமூக வலை​தளத்​தில் ராகுல் பகிர்ந்​துள்​ளார். இதனுடன் வெளி​யிட்ட பதி​வில், “காவல் துறை​யினர் ஏகே-47 துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில், ஒரு மாணவரின் கால் எலும்பு முறிந்து அவரது ராணுவக் கனவு பாழானது. மற்ற இரு மாணவர்​களின் தோள்​களில் தோட்டாக்​கள் பாய்ந்​தன. தங்​களின் எதிர்​காலமே சீரழிந்துவிட்டதாக அம்​மாணவர்​கள் கண்​ணீருடன் தெரி​வித்​தனர்.

அவர்​களின் உளவியல் அதிர்ச்​சிக்​கும் நொறுங்​கிய கனவுகளுக்கும் பிரதமர் நரேந்​திர மோடி​யும், பிஹார் முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி​யும் பதில் சொல்​வார்​களா?” எனக் கேள்வி எழுப்​பி​னார். நியாய​மான கோரிக்​கைகளைக் கேட்​கும் மாணவர்​கள் மீது “லத்​தி​யும் தோட்​டா​வும்” பயன்​படுத்​தி​யதற்​குக் கண்​டனம் தெரிவித்​து, சுயாதீன விசா​ரணை நடத்தவும் வலி​யுறுத்தியுள்​ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version