ரபாடா – செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவிப்பு

0
23

பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய காகிசோ ரபா​டா,
செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்து 98 ரன்​கள் குவித்து அசத்​தி​னார்.

ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி முதல் இன்​னிங்​ஸில் 333 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 185 ரன்​கள் எடுத்​தது. டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெர்​ரெய்ன் 10 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தென் ஆப்​பிரிக்க அணி தொடர்ந்து விளை​யாடியது. கைல் வெர்​ரெய்ன் (10) மேற்​கொண்டு ரன் ஏதும் எடுக்​காமல் ஆசிப் அப்​ரிடி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 76, சைமன் ஹார்​மர் 2, மார்கோ யான்​சன் 12, கேசவ் மகா​ராஜ் 30 ரன்​களில் சீரான இடைவெளி​யில் ஆட்​ட​மிழந்​தனர். 306 ரன்​களுக்கு 9 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்த காகிசோ ரபாடா அதிரடி​யாக விளை​யாடினார்.

கடைசி விக்​கெட்​டுக்கு 98 ரன்​கள் குவித்த பிறகே இந்த ஜோடியை பிரிக்க முடிந்​தது. ரபாடா 61 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 71 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆசிப் அப்​ரிடி பந்தை லாங் ஆன் திசை​யில் விளாச முயன்ற போது அப்​துல்லா ஷபிக்​கிடம் கேட்ச் ஆனது. முடி​வில் தென் ஆப்​பிரிக்க அணி 119.3 ஓவர்​களில் 404 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

செனுரன் முத்​து​சாமி 155 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 89 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். பாகிஸ்​தான் அணி தரப்​பில் அறி​முக வீர​ராக களமிறங்​கிய 38 வயதான ஆசிப் அப்​ரிடி 6 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். இதன் மூலம் அறி​முக வீர​ராக அதிக வயதில் அதிக விக்​கெட்​கள் வீழ்த்​திய வீரர் என்ற சாதனையை ஆசிப் அப்​ரிடி படைத்​தார். இதற்கு முன்​னர் 1933-ம் ஆண்டு தனது 37 வயதில் மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ராக அறி​முக​மான இங்​கிலாந்து சுழற்​பந்து வீச்சாளர் சார்​லஸ் மரியோட் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யதே சாதனை​யாக இருந்​தது.

71 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி நேற்​றைய 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 35 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 94 ரன்​கள் எடுத்​தது. இமாம் உல் ஹக் 9, அப்​துல்லா ஷபிக் 6, ஷான் மசூத் 0, சவுத் ஷகீல் 11 ரன்​களில் நடையை கட்​டினர். பாபர் அஸம் 49, முகமது ரிஸ்​வான் 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் சைமன் ஹார்​மர் 3 விக்​கெட்​களை​யும், ரபாடா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். கைவசம் 6 விக்​கெட்​கள் இருக்க 23 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள பாகிஸ்​தான்​ அணி இன்​று 4-வது நாள்​ ஆட்​டத்​தை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here