ஆர்.பி.உதயகுமார் தாயார் படம் திறந்துவைப்பு: மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பழனிசாமி

0
14

அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயார் மீனாள் அம்​மாளின் படத்தை கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திறந்​து​வைத்தார். முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயாரும், போஸ் தேவரின் மனை​வி​யு​மான மீனாள் அம்​மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாள​ராக இருந்​தார்.

உடல் நலக்​குறை​வால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்​மாள் கடந்த 8-ம் தேதி கால​மா​னார். இதையடுத்​து, அவரது உடல் மதுரை திரு​மங்​கலம் அரு​கில் உள்ள டி.குன்​னத்​தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப வளாகத்​தில் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.

இந்​நிலையில், மீனாள் அம்​மாளின் படத் திறப்பு நிகழ்ச்சி டி.குன்​னத்​தூர் ஜெயலலிதா நினைவு மண்டப வளாகத்​தில் நேற்று நடை​பெற்றது. இதில், அதி​முக பொதுச் செய​லா​ள​ர் பழனி​சாமி பங்​கேற்​று, மீனாள் அம்​மாளின் படத்​தைத் திறந்து வைத்​தார். தொடர்ந்​து, அவரது படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மத்​திய அமைச்​சர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன், வேலம்மாள் கல்விக் குழு​மத் தலை​வர் முத்​து​ராமலிங்​கம், அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் வேலுமணி, செல்​லூர் கே.​ராஜு, ராஜேந்திர பாலாஜி, மணி​கண்​டன், எம்​எல்​ஏ-க்​கள் ராஜன் செல்​லப்​பா, பெரியபுள்​ளான், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், பார்​வர்டு பிளாக் நிர்​வாகி கதிர​வன், பார​திய பார்​வர்டு பிளாக் தலை​வர் முரு​கன், தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் தலை​வர் திரு​மாறன் மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​யினர் பங்​கேற்​றனர். நிகழ்ச்​சிக்​கான ஏற்​பாடு​களை ஆர்​.பி.உதயகு​மார், ஆர்​.பி.யோகீஸ்​வரன், எம்​.​மாரீஸ்​வரி உள்ளிட்டோர் செய்​திருந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here