புதுக்கடை அருகே இனயம் பகுதி 41-ம் அன்பியத்தை சேர்ந்தவர் ஜெர்மினாள் (70). அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன். மீனவர்களான இருவரும் உறவினர்கள் ஆவார்கள். ஜெர்மினாள் வசிக்கும் வீட்டை சந்திரன் விலைக்கு கேட்டுள்ளார். வீட்டை ஜெர்மினாள் கொடுக்காத காரணத்தால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் ஜெர்மினாளை சந்திரன் கெட்ட வார்த்தைகள் பேசி கையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மூதாட்டி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.














