புதுக்கடை, அம்சி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் விஜயகுமார் (42) என்ற கூலித் தொழிலாளி டீக்கடை முன் நின்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விஜயகுமார் மனைவி விஜி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
