முஞ்சிறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வின்சி (20) என்பவரிடம், கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெபிஷ்ராஜ் (30) பழக்கத்தை ஏற்படுத்தி, 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து மாணவி வின்சி புதுக்கடை போலீசில் புகார் அளித்துள்ளார். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
