ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். சுஜின் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் ரூ. 12 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவருடன் சேர்ந்து வாழ சம்மதிக்கவில்லை. இதனால் சுஜின், திருமண மோசடி செய்ததாக குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் கேத்ரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.














